பொங்கலுக்கு சிறப்பு பேருந்தில் இயக்குவது தொடர்பாக ஜனவரி 8-இல் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார். ஜன.15 முதல் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. சிறப்பு பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கலாமா என ஆலோசிக்க உள்ளனர். அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜன.09 முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.