சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் நிர்வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் உரையில் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். "போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது, மாநிலத்தில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்” என்றார்.