அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (செப்.27) நேரில் சந்தித்தார். இதுகுறித்து உதயநிதி அவரது X தள பக்கத்தில், "பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!" என்று பதிவிட்டுள்ளார்.