ஈரோடு மாவட்டம் ஊமாரெட்டியூரை சேர்ந்த செல்வக்குமார் (32) காவலராக இருந்தார். இவர் வேன் டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வீடியோ பரவியதால் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் செல்வக்குமார் நேற்று (அக். 7) தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து செல்வக்குமார் தொடர்பான வீடியோவை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் உறவினர்கள் போராட்டம் செய்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.