ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிறுவனை சந்தித்து நலம் விசாரிக்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 'புஷ்பா 2' திரைப்பட ரிலீஸ் நாளில் பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளார்.