கெஜ்ரிவாலின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு

65பார்த்தது
கெஜ்ரிவாலின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தியது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் இல்லத்தில் தாக்கப்பட்டதாக எம்.பி., புகார் கூறியதால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதே சமயம் கெஜ்ரிவாலின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி