விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீங்கள் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் இந்திய மக்கள் உங்கள் நலனுக்காக பிராத்திக்கிறார்கள். 140 கோடி இந்தியர்களும் எப்போதும் உங்கள் சாதனைகளை நினைத்து பெருமை கொள்கின்றனர். நீங்கள் பூமி திரும்பிய பின் உங்களை இந்தியாவில் வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.