சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “உங்களிடம் இருந்து இன்னும் பல ஆஃப் ப்ரேக் பந்துகளை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஓய்வு என்ற கேரம் பால் போட்டு அனைவரையும் போல்ட் ஆக்கிவிட்டீர்கள். ஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் பல்வேறு மாறுதல்களை காட்டி பேட்ஸ்மேன்களை வீழ்த்தக் கூடிய திறன் பெற்றவர். உங்களது 99 ஜெர்சியை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.