மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

73பார்த்தது
மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்று கொடுத்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி