தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தவெக தலைவர் விஜய் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, "நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம். தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.