நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்... வீடியோ!

66பார்த்தது
போர்ச்சுகல் நாட்டின் பெஜா விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடுவானில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இரு சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டதால் விமான சாகச நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி