ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாகனம்! உலக சைக்கிள் தினம்

83பார்த்தது
ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாகனம்! உலக சைக்கிள் தினம்
இன்று உலக சைக்கிள் தினம். சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3-ந் தேதியை உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடுமாறு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைவதற்குமுன் சைக்கிள்தான் மனிதனுக்கு உற்ற தோழனாக இருந்தது. பைக், கார் போன்ற வாகனங்களின் வரவு சைக்கிள் பயன்பாட்டை மட்டுமல்ல, மனிதனின் ஆரோக்கியத்தையும் அழித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.