கடுமையான வயிறு வலி உள்ளவர்கள் இளம் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து குடித்தால் வயிறு வலி நீங்கும். ஜீரணக் கோளாறு குணமாகும். வயிற்று எரிச்சல் இருப்பவர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால், வயிற்றில் ஏற்படும் இரைச்சல், எரிச்சல் ஆகியவை குணமாகும். மேலும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் அழற்சி, நெஞ்சில் தேங்கிய சளி, வயிறு மந்தம் ஆகியவை நீங்கிவிடும்.