2007-ம் ஆண்டு டென்மார்க் கடற்கரைக்கு வந்த டால்ஃபின் ஒன்று மனிதர்களை பார்த்ததும் ஒலி எழுப்பி விளையாடியது. இந்த ஒலியினால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்தபோது 10,833 வித்தியாசமான ஒலிகளை எழுப்புவது தெரிய வந்தது. தன் குழுவில் இருந்து நீண்ட தூரம் பிரிந்து வந்து விட்டதால் குழுவிடம் சேர எண்ணி ஒலி சமிக்ஞை அனுப்பலாம், அப்படி இல்லை என்றால் தன் தனிமையை போக்கிக் கொள்ள மனிதர்களைப் போல பாட்டு பாடலாம் என விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.