எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா

1091பார்த்தது
எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள எசனை ஊராட்சி, பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது காட்டு மாரியம்மன் கோவில், மிகவும் பழமையும் பிரசித்தி பெற்றதாகும். இந்த காட்டு மாரியம்மன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு சித்திரை மாதம் திருவிழா கடந்த வரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி மாரியம்மனுக்கு, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏப்ரல் 29ஆம் தேதி பொங்கல் மாவிளக்கு மற்றும் ஆடு கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குலதெய்வமாக விளங்கி வருவதால், பக்தர்கள் பயபக்தியுடன் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள், இதனால் திருவிழா காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இதில் நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் க்கு பொங்கல், மாவிளக்கு, வைத்தும், ஆடு கோழி ஆகியவை பலியிட்டும், மேலும் தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்தும், அங்க பிரதட்சணம் செய்தும், தங்கள் நேர்த்திக் கடனை செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு ஊர் இளைஞர்கள் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பில் அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி