உதகைக்கு செல்ல இனி கட்டுப்பாடு.. இ-பாஸ் அறிமுகம்..?

16144பார்த்தது
உதகைக்கு செல்ல இனி கட்டுப்பாடு.. இ-பாஸ் அறிமுகம்..?
கோடை வெயில் தமிழ்நாட்டில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாள்தோறும் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறையில் மக்கள் குளிர்ப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோருக்கு இ-பாஸ் வழங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க உள்ளன. இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதள முகவரியும் விரைவில் வெளியிடப்படும்.

அதிக எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்கள் வருவதை அடுத்து, இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் மே 7ஆம் தேதி முதல் ஜுன் 30 வரை இ-பாஸ் இருந்தால்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி