ஏப்ரல் 9 முதல் நீச்சல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

1922பார்த்தது
ஏப்ரல் 9 முதல் நீச்சல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளும் வகுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்படும். ஜூன் 3ம் தேதி வரை 5 பிரிவுகளாக நடத்தபடவுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. 12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். 12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் வரி உட்பட 1770 ஆகும். பயிற்சி கட்டணத்தினை மின்னணு பண பரிமாற்றம் மூலம் அலுவலகத்திலே செலுத்தலாம்.

கட்டணம் செலுத்த வரும்பொழுது ஆதார்கார்டு கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு நபருக்கு ஒரு மணிநேரத்திற்கான கட்டணம் 59 ஆகும். மேலும் விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடம் பழுது பார்க்கப்பட்டு பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு மாத கட்டணம் 590 ஆகும்.

மேலும் ஏதேனும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 மற்றும் நீச்சல்குள பயிற்சியாளரை 8870439645 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி