அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது, இதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார். மதுரையில் சிபிஎம் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், அருணாச்சலப் பிரதேசத்தைப் பற்றி நாம் பேசினால் 'நக்சல்' என்பார்கள், 'ரெய்டு' விடுவார்கள். இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பது கிடையாது என்று சாடினார்.