மக்காச்சோள மூட்டைகள் திருட்டு, போலீசார் விசாரணை

73பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ், இவர் பரவாய் கிராமம் சமத்துவபுரம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக மக்காச்சோளம் கொள்முதல் நிலையமும், எடை மேடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அதே இடத்தில் இருப்பு வைத்துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் மூட்டைகள் எடை மேடை பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று இரவு உடல் நலம் சரியில்லாததால், எடைமேடையில் தங்காமல் காமராஜ் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையறிந்த மர்ம நபர்கள் எடை மேடை பகுதிக்கு சென்று, அங்கிருந்த மின்சார இணைப்பை துண்டித்து, சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள மூட்டைகளில் இருந்து 70 மூட்டைகளை, வாகனம் மூலம் திருடி சென்று விட்டனர். திருடி செல்லப்பட்ட மக்காசசோளத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 1. 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மக்காச்சோள திருட்டு சம்பவம் குறித்து காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி