மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது

70பார்த்தது
மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியாண்டின் துவக்க நாளான நேற்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவி கலியம்மாள் அய்யாக்கண்ணு தமிழக அரசின் விலையில்லா பாடநூல்களை வழங்கினார். பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரிய பெருமக்களையும் மாணவச் செல்வங்களையும் அவர்பாராட்டினார். மேலுல் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி மாணவர்கள் கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை
மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முருகானந்தம், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செல்வராசு வரவேற்றார். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி