காதலியுடன் இருந்த கணவன்.. புரட்டியெடுத்த மனைவி (வீடியோ)

73பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று திங்கள்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர் தனது காதலியுடன் உணவகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி உணவகத்திற்கு வந்துள்ளார். கணவனையும், அவரது காதலியையும் கையும் களவுமாக பிடித்தார். ஆத்தரமடைந்த அப்பெண், கணவனை கடுமையாக தாக்கிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நின்ற காதலியையும் கீழே தள்ளி சரமாரியாக அடித்தார். அப்பெண்ணின் உறவினராக மற்றொரு பெண்ணும் சேர்ந்து காதலியை தரதரவென இழுத்து தாக்கினர்.

இந்த சண்டை குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தி எச்சரித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி