வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

61பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று பார்வையிட்டார்.
ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம் ஊராட்சியில் பழங்குடியினர் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பணிகளை நல்ல தரத்துடன் விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அருகில் இருந்த கலைக்கூத்தாடிகள் இன மக்கள் 9 குடும்பம் இங்கு தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கும் வசிக்க வீடு இல்லாததால் வீடு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர், உடனடியாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவர்களை பயனாளிகளாக எடுத்துக்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் 9 நபர்களுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்பின்னர் ஆலத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், காரை கிராமத்தில் தொல்லுயிர் பூங்காவில் கம்பி வேலிகள் அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். நிகழ்வின் பொது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி