இணை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் - அமைச்சர் தகவல்!

546பார்த்தது
இணை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் - அமைச்சர் தகவல்!
இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகத்தில் 30 பேர் பாதிக்கபட்டுள்ளனர். வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர். யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி