ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜீத் குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக கூறி, கட்சியில் இருந்து நீக்கி தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் நடவடிக்கை மேற்கொண்டார். பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த சுஜீத் விரைவில் அக்கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது.