தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் நேற்று (அக். 14) இரவு கனமழை பெய்த நிலையில் இன்று (அக். 15) காலை முதல் மீண்டும் தொடர்கிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை அசோக் நகர் பத்தாவது நிழற்சாலையில் பாதாள சாக்கடை இணைப்பு குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலந்து சாலையில் ஓடுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.