நோ பார்க்கிங் பகுதியில் நின்ற அரசுப் பேருந்துக்கு அபராதம்

52பார்த்தது
நோ பார்க்கிங் பகுதியில் நின்ற அரசுப் பேருந்துக்கு அபராதம்
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று (மே 23) சென்று கொண்டிருந்தது. கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்தை ஓட்டுனர், தாம்பரத்தில் நிறுத்தினார். பேருந்து நிறுத்தப்பட்ட பகுதி ’நோ பார்க்கிங்’ பகுதி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விதிமீறலில் ஈடுபட்டதற்காக அரசுப் பேருந்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.