பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளில், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், டூவீலர்களின் வருவதற்கு அனுமதி இல்லை. சொந்த வாகனங்களில் வருபவர்கள், டிஎஸ்பி அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று பாஸ் பெற வேண்டும். பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.