ரயிலில் சிக்கிய பயணிகள் - ஹெலிகாப்டரில் பறந்த உதவி

4008பார்த்தது
ரயிலில் சிக்கிய பயணிகள் - ஹெலிகாப்டரில் பறந்த உதவி
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த 1000 பயணிகளுக்கும் ஹெலிகாப்டர் உதவியுடன் உணவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி