1800-களில் மத்திய அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்பட்டிருந்தது. குறைந்த விலையில், எளிமையாக செய்யக்கூடிய பாப் கார்ன் ஏழை எளிய மக்களின் பசியை தீர்த்தது. 1927-ம் ஆண்டுகளில் பேசும் படங்கள் வெளியான போது ரசிகர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் பாப்கார்னை திரையரங்குக்குள் எடுத்துச் செல்ல தொடங்கினர். அதை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் பாப்கார்ன் விற்பனையை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கம் உலகம் எங்கிலும் உள்ள தியேட்டர்களுக்கும் பரவியது.