சேலம் மாவட்டம் நெத்திமேடு அருகே உள்ள பெருமாள் கோயில் கரடு பகுதியில் பழமையான அம்சாயி அம்மன் மற்றும் சிவலிங்கம் சிலைகள் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்த பழமையான சிலைகள் காணவில்லை என புகார் வந்ததையடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1190-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 725 ஆண்டுகள் பழமையானதாகும்.