தேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் பணியை சமரசமின்றி மேற்கொண்டு, உழவர்கள் உலகிற்கே உணவளிக்கும் உன்னத சேவையாற்றுகின்றனர். அத்தகைய உழவர் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், பருவமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.