மதுவில் தண்ணீர் ஊற்றி விற்பனை.. 13 பேர் சஸ்பெண்ட்

70பார்த்தது
மதுவில் தண்ணீர் ஊற்றி விற்பனை.. 13 பேர் சஸ்பெண்ட்
நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.இதன் மூலம் தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. இந்நிலையில் இது சீசன் மாதம் என்பதால் வழக்கத்தை விட மது வகைகள் அதிகமாக விற்பனை ஆகின்றன. இதை பயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தண்ணீர் உள்ளிட்டவற்றை மதுவில் கலந்து விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு அதிக அளவில் வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த சோதனையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த 4 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 டாஸ்மாக் ஊழியர்கள் என 13 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.