இஸ்ரேல் பிரதமர் நரகத்தில் எரிய வேண்டும்

62பார்த்தது
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீன குழந்தைகள் எரிக்கப்படுவதை போலவே பெஞ்சமின் நெதன்யாகு நரகத்தில் எரிய வேண்டும் என அயர்லாந்து எம்பி தாமஸ் கோல்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் சிக்கி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டதை ஒரு சிறிய தவறு நடந்துவிட்டதாக இஸ்ரேல் அரசு கூறுகிறது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். பாலஸ்தீன நாட்டை அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த மே 28-ம் தேதி முறையாக அங்கீகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.