பக்ரீத் பண்டிகை- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

66பார்த்தது
பக்ரீத் பண்டிகை- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாளை (ஜூன்17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் – சகோதரத்துவம் அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி