பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம், சிறந்த திரைப்படம், இயக்கம், கதாநாயகி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சர்வதேச திரைப்படம், பாடல், துணை நடிகை, தழுவப்பட்ட திரைக்கதை, இசையமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிக பிரிவில் பரிந்துரையான ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.