புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் ஆத்மா பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்த பயிற்சி முகாம் திருக்காஞ்சியில் நடந்தது. ஆத்மா திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். ஆத்மா துணை திட்ட இயக்குனர் கலைச்செல்வி மற்றும் காரைக்கால் பஜன்கோ உழவியல் துறை பேராசிரியர் மோகன், இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்து பேசினர்.