தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தங்கியிருந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், பொங்கள் திருநாளை ஒட்டி 45,140 பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.