’கோயில் நகரம்' என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் ஆன்மீக நகரமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் நகரின் இந்த முதல் சிவன் கோயில் புராண காலகட்டத்தில் தேவலோகத்தில் இருந்து வந்து இந்திரனால் நிறுவப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.