பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டின் 'Red Pix' யூடியூப் சேனலை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் வேனில் சென்னை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர் வாழப்பாடி அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.