கள்ள சந்தையில் மது விற்ற மூதாட்டி: 800 பாட்டில்கள் பறிமுதல்

536பார்த்தது
கள்ள சந்தையில் மது விற்ற மூதாட்டி: 800 பாட்டில்கள் பறிமுதல்
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் தாலுக்கா பொன் விளைந்த களத்தூர் கிராமத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சதாசிவம் தலைமையில் பெண் காவலர் உள்ளிட்ட கலால் பிரிவு போலீசார் மாறுவேடத்தில் விசாரித்த போது சுலோச்சனா என்ற மூதாட்டியும், குணசுந்தரி என்கிற பெண்ணும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமிருந்து சுமார் 800 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி