அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என பாஜக தங்களை மிரட்டியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். பொன்னேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “பாஜகவிலிருந்து எங்களுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள், மிரட்டல்கள். எங்கள் வங்கி கணக்கை முடக்கினார்கள், பயமுறுத்தினார்கள். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்” என்று பேசினார். பிரேமலதாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.