முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்து திறக்கப்படுகிறது. இதனால், திண்டுக்கல் - நிலக்கோட்டை பகுதியில் 1,797 ஏக்கர்கள், மதுரை - வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர்கள், மதுரை வடக்கு, கிழக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர்கள் என சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.