முட்டையிடும் கோழிக்குத்தான் வலி தெரியும் : ஆர்.எஸ்.பாரதி

37488பார்த்தது
முட்டையிடும் கோழிக்குத்தான் வலி தெரியும் : ஆர்.எஸ்.பாரதி
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக முதல்வர் ரூ.6,000 அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுள்ளது. இந்தநிலையில், ரூ.6000 போதாது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, முட்டையிடும் கோழிக்குதான் வலி தெரியும் என விமர்சித்துள்ளார். மேலும், தமிழக அரசு என்ன செய்தாலும் திருப்தி இல்லை என்றுதான் இபிஎஸ் கூறுவார் என குற்றம்சாட்டிய அவர், புயல் நிவாரண நிதி குறித்து கேட்க வேண்டியது மத்திய அரசைதானே தவிர தமிழக அரசிடம் அல்ல என காட்டமாக கூறினார்.