எலிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சக எலிகள் மயக்கமடைந்து விட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மற்ற எலிகள் முதலுதவி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மயக்கம் அடைந்த எலிகளிடம் மற்ற எலிகள் தனித்துவமான நடத்தைகளை வெளிப்படுத்தின. மோப்பம் பிடித்தல், சீர்படுத்துதல், துணையின் வாய் அல்லது நாக்கை கடித்தல், நாக்கை வெளியே இழுத்து முதலுதவி செய்தல் போன்ற செயல்களை செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.