ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா வரும் டிச.16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்கிறார். முன்னதாக, “ஒன்றிய அரசின் இந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை, எங்களால் முடிந்தவரை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.