ஆபாச கருத்து.. எச்.ராஜா மனு தள்ளுபடி

76பார்த்தது
ஆபாச கருத்து.. எச்.ராஜா மனு தள்ளுபடி
சமூக வலைத்தளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அரசியலில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என எச்.ராஜா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர்.