ஹெச்.டி. ரேவண்ணா சிறையில் இருந்து விடுதலை

59பார்த்தது
ஹெச்.டி. ரேவண்ணா சிறையில் இருந்து விடுதலை
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று (மே 14) விடுவிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள மக்கள் சிறப்பு நீதிமன்றம் நேற்று இந்த வழக்கை விசாரித்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 10 நாட்கள் சிறையில் இருந்த அவர் இன்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். ரேவண்ணா விடுதலையையொட்டி ஏராளமான ஜேடிஎஸ் தொண்டர்கள் குவிந்தனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

தொடர்புடைய செய்தி