இந்தோனேசியாவில் வெள்ளம்.. 50 பேர் பலி

84பார்த்தது
இந்தோனேஷியாவில் பெய்து வரும் கனமழையால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மராபி எரிமலை தாலுகாவில் பெய்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் பல வீடுகள் இடிந்து, குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், காணாமல் போன 27 பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி