கண் கலங்கிய பிரதமர் மோடி (வீடியோ)

15507பார்த்தது
நாடு முழுவதும் லோக் சபா தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. மக்களவை தேர்தலில் இதுவரை 4 கட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று(மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் செய்த மோடி, கங்கை நதி பற்றி பேசும்போது தனது தாயை நினைவு கூர்ந்து கண் கலங்கினார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நரேந்திரமோடி மேடையில் கண்ணீர் சிந்துவார் என கூறியிருந்தார், அதன்படி நடக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி