எல்லா கீரைகளையும் போலவே, அரை கீரையிலும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அரைக்கீரையில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், மாங்கனீஸ், இரும்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. அரைக்கீரை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து.. உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் சதவீதத்தை அதிகரிக்கிறது.